மாரடைப்பு வருவதற்க்கு முன் அறிகுறிகள் என்ன ?

Ticker

6/recent/ticker-posts

மாரடைப்பு வருவதற்க்கு முன் அறிகுறிகள் என்ன ?இன்றைய சூழலில் மாரடைப்பு என்பது மிக பெரிய கொடிய வியாதியாக உள்ளது. எந்த வயதினரையும் வயது வித்தியாசம் இன்றி சத்தமே இல்லாமல் ஒரு மனிதரை கொன்றுவிடும். எனவே அதனை தடுப்பதற்க்கான வழிகள் என்னவென்றால் மாரடைப்பு வருவதற்க்கு முன்னால் ஒரு சில அறிகுறிகள் நமது உடலில் வெளிபடும்,  அதனை சரியான நேரத்தில் நாம் கண்டுபிடித்து உரிய நேரத்தில் நாம் மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்றுவிட்டால் நமது உயிரினை பாதுகாத்துகொள்ள முடியும்.


 இல்லை என்றால் இது போன்று எதிர்பாராமல் வரகூடிய இறப்பை நம்மால் தடுக்கமுடியாது. கடந்த இருபது வருடங்களாக உலகளவில் இருதய நோயால் பாதிக்கபடுவோர் என்னிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனை குறைப்பதற்கு மக்களிடம் பல விழிப்புனர்வுகள் ஏற்படுத்தபட்டு வருகின்றன.
மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் 


1) நம்முடைய மார்ப்பு பகுதியில் தொடர்ச்சியான வலி மற்றும் விட்டு விட்டு வலி இருக்கலாம். மேலும் நெஞ்சு வலியின் தீவிரதன்மை அதிகமாக இருக்கும்

2) இந்த வலி கழுத்தின் பின்புறம் வரை அதன் வலி பரவும்

3) பின்பக்க வலது கையில் வலி தொடர்ச்சியாக இருக்கும். மேலும் வலது கையின் மனிகட்டு பகுதியில் வலி கடுப்பது போன்ற உணர்வு இருக்கும்.

4) மேலும் நமது உடல் அதிகபடியான சோர்வு ஏற்படகூடும்.

5) லேசனா தலை சுற்றல், தலைவலியும் ஏற்படும்.

6) உங்கள் இதயதுடிப்பு அசாதாரனமாக இருக்கும். அல்லது தாறுமாறாக இதயதுடிப்பாக  இருக்கும்.

7) தாடை, மேல் வயிறு போன்ற இடங்களிலும் இதன் வலி இருக்கலாம்.

8) மார்பு பகுதியில் குத்துவது போன்ற

 உணர்வு ஏற்படலாம்.

9) மேலும் நமது உடல் ஈரமானது போல இருக்கலாம். அல்லது அதிகபடியாக வியர்த்து கொட்டும்.

10) அஜீரன கோலாறு மற்றும் குமட்டல் வாந்தி ஏற்படகூடும்.

11) மார்பு அழுத்தம், கவலை உணர்வு, படபடப்பு, மூச்சு தினறல் போன்றவை ஏற்படும்.

12) அதிகபடியான நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

13) திடிரென மயக்க சூழ்நிலை ஏற்படகூடும்.


மேலே குறிப்பிடபட்டுள்ள அனைத்து அறிகுறிகளிலும் முக்கியமாக நாம் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டியது மார்பு பகுதியில் அதிகபடியான வலி இருந்தால் உடனே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. நாம் தாமதபடுத்தும் ஒவ்வொரு நிமிடமும் நமது உயிரழப்புக்கு நாமே காரணமாகிவிட கூடாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்