ஏசி வெடிப்பதற்க்கான காரணம் என்ன ?

Ticker

6/recent/ticker-posts

ஏசி வெடிப்பதற்க்கான காரணம் என்ன ?

Reason for Airconditioner Burn


Burning smell from ac unitகடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஏசி வெடிப்பது போன்ற செய்திகள் அதிகமாக செய்திகளில் வந்தவண்ணம் உள்ளன. இதனால் ஏசி வாங்க வேண்டும் என்று நினைப்போருக்கு இது பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இவை எப்போது வெடிக்கும் என்ற என்னம் ஏசியை பயன்படுத்துவோரிடம் தற்போது எழுந்துள்ளது. 


Burning smell from ac unit


ஏசியை போருத்தவரை அதில் ஏற்படகூடிய சிறிய பழுதுதான் பெரிய வெடிப்புக்கு காரணமாக அமைகின்றன. ( Burning smell from ac unit ) ஏசியில் வர கூடிய மாறுபட்ட வாசனையை வைத்து ஏசியில் பிரச்சனை உள்ளது என நம்மால் அறிந்துகொள்ள முடியும்.  எனவே ஏசியில் சிறிய பழுது ஏற்பட்டால் கூட உடனே ஏசி சர்வீஸ் செய்பவரை கூப்பிட்டு உடனடியாக சரி செய்தல் வேண்டும். அதற்க்கு பதில் நாம் சரிசெய்ய முயர்ச்சிக்க கூடாது. கீழ் வரும் பதிவுகளில் இதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.


Burning smell in Acஏசி வெடிக்க முக்கியமான காரணம் :

1) ( Low quality stabilizer used ) தரமற்ற ஸ்டெப்லைசரை பயன்படுத்துவது வெடிப்பிற்க்கு இது மிக முக்கியமாக சொல்லபடுகிறது. தரமற்ற ஸ்டெப்லைசரை பயன்படுத்தும் போது சரியான வோல்ட்டேஜை நிலையாக ஏசிக்கு கொடுக்க முடியாது. இதனால் குறை மின் அழுத்தம் மற்றும் உயர் மின் அழுத்தம் வருவதன் மூலம் ஏசி வெடிக்க நேரிடுகிறது.

2) ( electrical issues ) சரியான மின் இனைப்பு இனைக்க படாவிட்டால் அல்லது தரமற்ற ஒயரை பயன்படுத்துவது, இதனால் ஒயர் எரிந்து இவை மூலமாக ஏசியில் தீ பிடிக்க காரணமாக அமைகின்றன. இதன் மூலம் ஏசி வெடிக்கின்றன.

3) ( water drop on compressor ) ஏசியின் கம்பரசிரினுள் மேல்பகுதியில் தேங்கும் தன்னீர் அவை கம்பரசிரினும் சென்றுவிடும் வாய்ப்புகள் அதிகம். இதனால் கம்பரசர் தீ பிடிக்கும்.Burning smell from ac unit


4) ( Ac Copper pipe ) பழைய ஏசிகளில் காப்பர் குழாய்கள் பயன்படுத்தபட்டது. ஆனால் தற்ப்போது வரகூடிய ஏசிகளில் அலுமினியம் பைப்புகள் பயன்படுத்த படுகின்றன. விலையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற அலுமினிய குழாய்களை பயன்படுத்துகின்றனர். இந்த அலுமினிய குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது குழாய்கள் வெடிக்கின்றன. இதுவே பெரும்பாலன வெடிப்புகளுக்கு காரணமாக அமைகின்றன என ஏசி தொழில்நுட்ப்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

5) ஏசியின் கண்டன்ஸரில் உருவாகும் அதிகபடியான வெப்பம் மற்றும் அதிகபடியான அழுத்தம் மூலமாக வெடிக்கின்றன.

6) ஏசியை இனைக்ககூடிய ஒயரிங்கில் சார்ட் சர்க்கீயூட் ஏற்பட்டால் தீ விபத்து உடனடியாக ஏற்படும்.

7) ( Compressor heating issues ) மேலும் கண்டன்ஸரை  காற்றோட்டம் இல்லாத பகுதியில் வைப்பது. இதனால் வெப்பம் சரியாக வெளியேர முடியாமல் வெப்பம் அதிகமாகி ஏசி  வெடிக்கின்றன.

8) ( Ac service ) ஏசியை மூன்றுமாத கால இடை வெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். சரியாக சர்வீஸ் செய்ய வில்லை என்றால் தூசி அதிமாகி பழுது ஏற்படகூடும். இதன் மூலம் காற்று சரியாக வெளியேற முடியாமல் வெடிக்கின்றன.


Burning smell from ac unit


9) நாம் தற்ப்போது பயன்படுத்தபடும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜிகளில் 600ஏ கேஸ் பயன்படுத்த படுகிறது. இந்த வகை கேஸ் எளிதாக தீ பற்றகூடியது. நாம் பயன்படுத்தகூடிய ஏசிகளில் இதன் கேஸ் லீக் ஆனால் எளிதில் தீ பற்றி எரியகூடும்.

10) ( High pressure of Gas ) ஏசிகளில் கேஸ் நிரப்பும் போது சரியான அளவில் நிரப்பபட வேண்டும். தயாரிப்பாளர்கள் கொடுக்கபட்ட  கேஸ் அளவு அழுத்தத்தை விட அதிகமான அழுத்தத்தை கொடுக்ககூடாது. இதனால் அதிகமாக கொடுக்கபடும் அழுத்தம் காரணமாக ஏசிகள் வெடிக்கின்றன.


Burning smell from ac unit


11)  ( Low quality air conditioner ) தரம் குறைவற்ற ஏசிகளை வாங்கி நாம் பயன்படுத்தும் போது. தரம் குறைவான பொருட்களை ஏசிகளில் பயன்படுத்துகின்றனர். எனவே புதிதாக ஏசி வாங்க நினைப்போர் தரமான ஏசிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். தரம் குறைவாக உள்ள ஏசியை வாங்கி நமது உயிருக்கு நாமே உளைவத்து கொள்ளகூடாது. ஏனென்றால் ஏசி வெடித்து ஒரு குடும்பம் முழுவதும் பலியாகி உள்ள சோகம் டீவியில் அடிக்கடி வரகூடிய செய்தியாக உள்ளது. எனவே இந்த எச்சரிக்கை மூலமாக நாம் ஏசி வாங்கும் போது பல தடவை யோசித்து வாங்குவது நல்லது.

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால் தான் ஏசிகள் வேடிக்கின்றன. ஏசியை பயன்படுத்துவோர் சரியான முறையில் பராமறித்தால் போதுமானது. ஏசி வெடிப்பதை நம்மால் எளிதாக தடுக்க முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்