கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர் எச்சரிக்கை ? அதிர்ச்சி ரிபோர்ட்

Ticker

6/recent/ticker-posts

கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர் எச்சரிக்கை ? அதிர்ச்சி ரிபோர்ட்

Google Chorme பயன்படுத்துவோர் எச்சரிக்கை ?

நாம் அனைவரும் கணினி பயன்படுத்தினாலும்  சரி மொபைல் போன் பயன்படுத்தினாலும் சரி பிரவுசிங் செய்வதற்க்கு அதிகமாக பயன்படுத்துவது ( Google Chrome browser ) கூகுள் குரோம் பிரவுசர். ஆனால் தற்ப்போது இந்த கூகிள் குரோம் பிரவுசர் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் என CERT அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதன் படி ஒரு ஹேக்கர் இந்த பிரவுசர் வழியாக எளிதாக நம்முடைய போனில் நுழைய முடியும் என பெரும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தகூடியது இந்த கூகிள் குரோம் பிரவுசர். ஏதாவது ஒரு செய்தியை தேடுவதற்கு கூட நாம் குரோம் புரோசரை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இந்த குரோம் பிரவுசரை ஹேக்கர்ஸ் சாதமாக பயன்படுத்திகொண்டு நம்முடைய டேட்டாக்களை திருடுகின்றனர். மேலும் நம்முடைய வங்கி கணக்குகள் அதன் பாஸ்வேர்டு இவற்றை எளிதாக நம்முடைய மொபைலில் இருந்து எடுக்க முடியும். மேலும் நம்முடைய போனில் எடுக்ககூடிய புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அவர்கள் எடுத்துகொள்ள முடியும். இது போக உங்கள் முன்பக்க கேமரா, பின்பக்க கேமரா இவற்றை அவர்கள் ஓபன் செய்து பார்க்க முடியும். அதாவது நீங்கள் டேட்டாவை ஆன் செய்த உடன் உங்கள் கேமரா மூலம் அவர்களால் உங்களை பார்க்க முடியும். உஙகளுடைய அந்தரங்க விஷயங்கள் கூட அவர்கள் கைகளுக்கு சென்றுவிடும். இதன் மூலம் உங்கள் வீடியோக்களை அவர்கள் வைத்துகொண்டு உங்களை மிரட்ட நேரிடும் என்று எச்சரிக்கின்றனர். உங்களின் அந்தரங்கள் செய்திகள் கூட சமூக வலைதளங்களில் காட்சி பொருளாக மாறிவிடும். எனவே நம்முடைய பாதுகாப்பை நாம் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

எப்படி ஹேக்கர்களிடம் இருந்து தற்காத்து கொள்வது?
1) முதலில் நீங்கள் பயன்படுத்தகூடிய Google chrome browser - ஐ அப்டேட் செய்ய வேண்டும்.

2) பழைய கூகிள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளன. இதன் காரணமாக சைபர் தாக்குதல் அதிகம் நடைபெறுகின்றன.

3) குரோம் பிரவுசர் 103.0.5060.53 இந்த வெர்ஷனுக்கு முந்தய வெர்ஷனை பயன்படுத்தினால் உங்கள் போன் கண்டிப்பாக ஹேக் செய்யபடும். இல்லை என்றால் ஹேக் செய்ய பட்டு  இருக்கலாம்.

4) உங்கள் குரோமின் புதிய வெர்ஷனை உடனே அப்டேட் செய்வதன் மூலம் உங்கள் போன் ஹேக் செய்யபட்டு இருந்தாலும் நீங்கள் அதில் இருந்து  தப்பித்து கொள்ள முடியும்.

5) Google Chrome version 104.0.5112.97 இந்த வெர்ஷனை நீங்கள் டவுன்லோடு செய்து இருக்க வேண்டும்.
6) உங்கள் பிரவுசரில் உள்ள History ஐ கிளியர் செய்துவிடுங்கள்

7) குரோம் பிரவுசரை ஓபன் செய்து வலது பக்கம் மூன்று டாட் இருக்கும் அதனை கிளிக் செய்து பின்பு செட்டிங்கை தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்பு. அதில் ( site setting ) சைட் செட்டிங்கை ஓபன் செய்யுங்கள். அதில் கேமரா வை லாக் ( lock ) செய்யுங்கள் 
8) அதே போல் அதில் ( microphone ) மைக்ரோ போன் என்று இருக்கும் அதையும் பிளாக் செய்யுங்கள்.

9) Site setting - ல் Data store கிளிக் செய்து அதில் clear All data கொடுத்து விடுங்கள். 

10) அடுத்து செட்டிங்குள் சென்று  privacy and security செக்க்ஷனுக்கு சென்று Always use secure connection ஆன் செய்துகொள்ளுங்கள்.

11) உங்களுக்கு வாட்ஸ்அப்பில் வரகூடிய தேவையற்ற ( links )லிங்குகளை கிளிக் செய்யகூடாது.ஏனென்றால் இப்பொது அதிகமாக ஸ்பேம் லிங்குகள் வாட்ஸ்ஃஅப்பிள்  வருகின்றன. அதை மீறி நீங்கள் லிங்கை கிளிக் செய்தால் உங்கள் Chrome browser ஹேக் ஆகிவிடும்

உதாரனமாக ஸ்பேம் லிங்குகள் :  Jio Data Offer, Iphone offer, Free 50GB Data, share links, bonus offer, Diwali offer, pongal offer, free internet offer.

இது போன்று வரகூடிய லிங்குகளை உடனே நீக்குவது நல்லது ( Delete ) 

இது போன்ற மாற்றங்களை உங்கள் குரோம் புரோசரில் செய்வதன் மூலம் நீங்கள் சைபர் கிரைம் தாக்குதல்களில் இருந்து தப்பித்து கொள்ள முடியும்.

நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்